காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா.அதன் பிறகு படிப்படியாக வாய்ப்பு குறைந்ததால் தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

விஜய் சேதுபதி – கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘வன்மம்’ படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தார். அப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அதே 2014ம் ஆண்டு ஹேமலதா என்பவரை கிரஷ்ணா திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாடால் 2016ம் ஆண்டு ஹேமலதாவை விவாகரத்து செய்தார் கிருஷ்ணா. இதையடுத்து, மன உளைச்சலிருந்து மீண்ட கிருஷ்ணா மீண்டும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்த நேரத்தில் தான் சுனைனா- கிருஷ்ணா இடையே இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது .

அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி சுனைனா தற்போதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.