சென்னை:

தமிழகஅரசின் தலைமை செயலகத்தை கட்சி பணிக்கு பயன்படுத்திய முதல்வர் எடப்பாடி மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்திஉள்ளது.

திமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி நேற்று தலைமை செயலகத் தில்,  முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில்  சேர்ந்தார்.

இந்த நிலையில், திமுக எம்.பி.யும் வழக்கறிஞர் பிரிவு தலைவருமான ஆலந்தூர் பாரதி,  தலைமை செயலகத்தில் வைத்து கே.சி.பழனிச்சாமியை அதிமுகவில் இணைத்து சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இதுகுறித்து,  திமுக முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் ஆளுநர் உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதி உள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், தன்னிச்சையாக பாஜக அரசுக்கு எதிராக கருத்து கூறியதால், அதிமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேசி பழனிசாமி அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மீண்டும் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.