உலகக் கோப்பை போட்டிக்கு உடல் தகுதி பெற்ற கேதர் ஜாதவ்

மும்பை

ரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் உடல் தகுதி பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் வரும் 30 ஆம் தேதி அன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகல் தொடங்க உள்ளன. இதில் இந்திய அணியில் விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, விஜய் சங்கர், தோனி, ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாகல், குல்தீப் யாதவ், ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணி இங்கிலாந்துக்கு 22 ஆம் தேதி சென்று 24 ஆம் தேதி முதல் பயிற்சி போட்டிகளில் கலந்துக் கொள்ள உள்ளது.

இந்த அணியில் இடம் பெற்றிருந்த கேதர் ஜாதவ் ஐபில் போட்டியில் விளையாடிய போது தோள்பட்டையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் இறுதி ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. அதை ஒட்டி அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என ஊகங்கல் எழுந்தன.

கேதர் ஜாதவ் உடல் நிலைய பரிசீலித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோ தெரபிஸ்ட் பேட்ரிக் பர்வர்ட் அவருக்கு பயிற்சிகள் அளித்து வ்ந்தார். நேற்று முன் தினம் அவருக்கு உடல் தகுதி சோதனை நடந்தது. இந்த சோதனையில் கேதர் ஜாதவ் காயம் குணமாகி தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.