ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘கீ’ இணையத்தின் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதிப்புகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில வருடங்கள் ஆனாலும், சில பிரச்சினைகளால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

பல முறை முயற்சித்தும், ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவித்து, பிறகு படம் வெளியாகாமல் போனது.

இந்நிலையில் இம்மாதம் 10 ஆம் தேதி ‘கீ’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு திரும்பவும் சிக்கல் ஏற்பட்டதால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் டிடிவி தினகரனை சந்தித்து பிரச்சினை குறித்து பேச டிடிவி தினகரன், கீ படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைத்து படம் ரிலீஸாக உதவி புரிந்துள்ளாராம். அதன்படி, சுக்ரா ஸ்டூடியோஸ் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.