சர்வதேச ஸ்னூக்கர் போட்டியில் இந்திய சிறுமி தங்கம் வென்று சாதனை

சர்வதேச ஸ்னூக்கர் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிறுமி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

snooker

சர்வதேச அளவில் பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பின் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ஸ்னூக்கர் போட்டி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய சிறுமி கீர்த்தனா, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் சுற்றிலேயே நாக்அவுட் செய்து வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து இந்திய போட்டியாளர் அனுபமா ராமச்சந்திரன் என்பவருடன் முதல் சுற்றில் கீர்த்தனா தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாக விளையாடி 3-1 என்ற செட் கணக்கில் அனுபமாவை வீழ்த்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் பெலரஸ் நாட்டின் அல்பினா லெஸ்சுக் என்பவருடன் போட்டியிட்ட கீர்த்தனா 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.