கீர்த்தி சுரேஷ் அடுத்த படமும் ஒடிடி தளத்தில் ரிலீஸ்..

டிகை கீர்த்தி சுரேஷ் இந்தியில் நடிப்ப தாக கடந்த வருடம் சென்றார். அதற்காக உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியானார். இதையே காரணமாக வைத்து மிகவும் ஒல்லியாகிவிட்டார் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.

வேறு வழியில்லாமல் மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒரு வருட இடைவேளைக்கு பிறகு நடித்த பெண்குயின் என்ற படம் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடியிருப்பதால் ஒடிடி தளத்தில் வெளியானது. தற்போது அவர் நடித்துள்ள மிஸ் இந்தியா படமும் ஒடிடியில் வெளியாக உள்ளது. அதற்கான பேச்சு வாத்தை நடந்து முடிந்திருக்கிற தாம். 10 கோடி கொடுத்து இப்படத்தை வாங்கியிருக்கிறதாம் பிரபல ஒடிடி தளம். படத்தின் தயாரிப்பாளரும் ஹேப்பியாம்.

ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், வரலட்சுமி நடித்த டேனி, யோகிபாபு நடித்த காக்டெயில் படங்கள்  ஒடிடியில் வெளியானது. அடுத்து சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படமும் ஒடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.