கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது….!

--

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் , ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘பெண்குயின்’ .

இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் தொடங்கப்பட்டது.

இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி, எடிட்டராக அனில் க்ரிஷ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தயாராக இருக்கும் படங்களை அமேசான் நிறுவனம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றி வருகிறது.

‘பொன்மகள் வந்தாள்’, ‘டக்கர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘பெண்குயின்’ படத்தையும் அமேசான் நிறுவனம் கைப்பற்றிவிட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.