திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், பெரிய பட்ஜெட் படங்களும் கூட ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகின்றன.


கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ‘பென்குயின் ‘ திரைப்படம் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ’அமேசான் பிரைம்’ தளத்தில் வெளியிடப்பட்டது.
அவர் நடித்துள்ள தெலுங்குப்படமான ‘மிஸ் இந்தியா’ திரைப்படமும் ,ஓ.டி.டி.யில் தான் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தை ’நெட்பிளிக்ஸ்’’ விலைக்கு வாங்கியுள்ளது.
ஜெகபதிபாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் ‘மிஸ் இந்தியா’வில் நடித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இன்னொரு செய்தி.
அவர் அஜய் தேவ்கான் ஜோடியாக ’மைதான்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் படப்பிடிப்பும் நடந்துள்ளது.
இந்த படத்தில் அவருக்கு அம்மா வேடம்.
அந்த சமயத்தில் மிஸ் இந்தியா படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் எடையை குறைத்திருந்ததால், அம்மா வேடத்துக்கு அவர் உடல் பருமன் பொருத்தமாக இல்லை.
இதனால், ’மைதான்’ படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
-பா.பாரதி.