இருமொழியில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதியபடம்..

டிகை கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ’பெண்குயின்’. அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
விளையாட்டு பின்னணி கதையாக இப்படம் உருவாகிறது. குட்லக் சக்தி என்று இப்படத்துக்கு பெயரிடப்பட்டி ருக்கிறது.

இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது அத்துடன் முக்கிய செய்தியாக படத்தின் டீஸர் வெளியிடு வது குறித்து அறிவித்திருக்கின்றனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணிக்கு சுதந்திர தினத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகிறது. அதைவிட சிறந்த நாள் வேறெதுவும் கிடையாது என படக் குழு தெரிவித்துள்ளனர்.
குட் லக் சக்தி படம் தமிழிலும் வெளியா கிறது. இதில் கீர்த்தியுடன் ஆதி, ஜெகபதி பாபு, ராகுல் ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். நாகேஷ் குகுனூர் இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார்.