உடனடியாக திருமணம் செய்யுமாறு கீர்த்தி சுரேஷுக்கு குடும்பத்தினர் நிர்ப்பந்தம்…

 

தமிழில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த மேனகா, ரஜினிகாந்துடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

திருமணமான பின், சினிமாவுக்கு ‘குட்பை’ சொன்ன, மேனகா தனது மகள் கீர்த்தி சுரேஷை மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.

தமிழில் கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக அறிமுகமான ‘இது என்ன மாயம்’ படம் ரிலீஸ் ஆகாத நிலையில் அவர் நடித்த ‘நீனு சைலஜா’ என்ற தெலுங்கு படம் பெயர் வாங்கி கொடுத்தது.

‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழ், தெலுங்கு படங்களில் ‘பிஸி’யாக இருக்கிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷை உடனடியாக கல்யாணம் செய்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் நிர்ப்பந்தம் செய்வதாக தெலுங்கு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் “கை நிறைய படங்கள் உள்ளதால் இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன்” என கீர்த்தி சுரேஷ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

– பா. பாரதி