தாஸ் சேட்டா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த கீர்த்தி சுரேஷ்….!

நடிகர் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணிபுரிந்து வந்த தாஸ் மரணமடைந்துள்ளார்.

அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்படும் இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பொதுவெளியில் ரசிகர்கள் திரண்டாலும் நடிகர்களை பாதுகாப்பாக கவனித்து கொண்ட தாஸ் மரணமடைந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பதிவில் ஆழ்ந்த இரங்கல்கள் தாஸேட்டா …உங்களை அறிந்த ஒவ்வொரு நபரும் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

பிருத்விராஜ் சுகுமாரன், மோகன்லால், சூர்யா போன்ற பிரபலங்களுடன் தாஸ் செட்டா பணியாற்றியுள்ளார். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வருத்தங்கள் என தெரிவித்துள்ளார் .

You may have missed