கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் அறிமுக இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தேசிய திரைப்பட விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டிரைலரை இந்திய சினிமா உலகின் சாதனையாளர்கள் மோகன்லால், தனுஷ் மற்றும் நானி வெளியிட்டனர். அமேசான் பிரைம் வீடியோவில் ஜுன் 19 அன்று பிரத்யேக உலக பிரிமீயருக்காக தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருகிறது.
அமேசான் பிரைம் வீடியோ உலக அளவில் ஐந்து மொழிகளில் வெளியிடும் 7 படங்களின் வரிசையில் மூன்றாவதாக வெளியாக உள்ள படம் பெண்குயின்.


திகில் திரைப்படமான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார். அவர் தனது கடந்த காலத்திலிருந்து ஒரு மர்மத்தை அவிழ்த்து தனது அன்புக்கு உரியவர் களைக் காப்பாற்ற ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் இப்படத்தை உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்கலாம். படம் பற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “பெண்குயின் படம் நான் பணியாற்றிய படங்களில் மிகவும் சுவாரசியமான சிறந்த படமாக இருக்கும். ‘ரிதம்’, ஒரு தாயாக, மென்மையானவளாக, அக்கறை உள்ளவளாக, ஆனால், துணிச்சலான பெண்மணி. அவள் குழப்பமானவள், ஆனால் உறுதியானவள். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவரும். கதைக்கு உயிர் கொடுக்கும் இயக்கு னரான ஈஸ்வர் கார்த்திக்குடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. உலகெங் கிலும் பார்வையாளர்களால் பாராட்டப்படும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கில் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும்.
உலக அளவில் வளர்ந்து வரும் பிரைம் வீடியோ நிறுவனத்துடன் இணைந்து பணி யாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.