தனக்கு வந்த காதல் கடிதத்தை பத்திரமாக பாதுகாக்கும் கீர்த்தி சுரேஷ்….!

--

விக்ரம் பிரபுவின் இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் தன் ரசிகர் ஒருவர் கொடுத்த காதல் கடிதம் பற்றி பேசியிருக்கிறார்.

நான் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு பரிசு கொடுத்தார். அந்த பரிசை பிரித்துப் பார்த்தபோது என் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம், ஒரு கடிதம் இருந்தது. கடித்தத்தை படித்துப் பார்த்தால் அவர் என் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார்.

நான் கல்லூரியில் படித்தபோது எனக்கு யாருமே காதல் கடிதம் கொடுத்தது இல்லை. இந்நிலையில் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடித்ததை தூக்கிப் போட மனம் இல்லாமல் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார்.