தியேட்டரில் ‘மாஸ்டர்’ படத்தை முதல் காட்சியில் பார்த்து ரசித்த கீர்த்தி சுரேஷ்

 

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர் உரிமையாளர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

தென் இந்தியா முழுவதும் இந்தப்படம் நேற்று வெளியானது. எல்லா மாநிலங்களிலும் தியேட்டர்கள் ‘ஹவுஸ்புல்’ ஆனது.

10 மாதங்களுக்கு பிறகு, பக்கத்து கேரள மாநிலத்தில் நேற்று தான் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

500 தியேட்டர்களில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்பட்டது. அத்தனை தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சினிமா நட்சத்திரங்கள் பலர், தியேட்டரில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளனர். அவர்களில் ’சர்கார்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷும் ஒருவர்.

“மாஸ்டர் படத்தை, தியேட்டரில் முதல் நாள், முதல் காட்சியில் பார்த்து பரவசம் அடைந்தேன்” என கீர்த்தி சுரேஷ் பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.

படம் பார்த்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் செய்தி பதிவிட்டுள்ளார்.

“10 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் சென்று படம் பார்த்தேன். மெய் மறந்து போனேன். விவரிக்க வார்த்தைகள் இல்லை” என கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி