கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன.
இந்தச் சூழலில் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது அமேசானில் நேரடியாக வெளியாகவுள்ள திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் வெளி வந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகியுள்ள திரைப்படம் குட்லக் சகி. நடிகர் ஆதி, ஜகபதி பாபு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். டி.எஸ்.பி இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.