தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் கீர்த்தி சுரேஷ்….!

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர்களில் நாகேஷ் குகனூரும் ஒருவர். 2016ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘தனக்‘ என்ற படத்திற்கு ‘சிறந்த குழந்தைகள் படம்’ என்ற தேசிய விருது கிடைத்தது

இந்த நிலையில் இயக்குனர் நாகேஷ் குகனூர் அடுத்ததாக இயக்கவுள்ள ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்திசுரேஷ்.அவருக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ஆதி பினிசெட்டி, ராகுல் ராமகிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பை புனேவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி