உடல் இளைத்துக் காணப்படும் கீர்த்தி சுரேஷ்….!

 

சாவித்ரி பையோபிக்கில் சாவித்ரியாக நடித்ததில் இருந்து கீர்த்தி சுரேஷுக்குப் பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன்-க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

அதேபோல் தெலுங்கில் நரேந்திரநாத் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திலும், நாகேஷ் குக்குநூர் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில், ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துவிட்டு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ். அதில், மிகவும் உடல் இளைத்துக் காணப்பட்டார்.

விளையாட்டை மையப்படுத்திய படங்களில் நடிக்கவுள்ளதால், உடலை அவர் மிகவும் குறைத்துள்ளார் என்று கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: insta gram, keerthi suresh, savithri, slim
-=-