பாக்., கொன்ற ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி….கெஜ்ரிவால்

டில்லி:

பாகிஸ்தான் ராணுவம் கொன்ற இந்திய வீரரின் குடும்பத்துக்கு கெஜ்ரிவால் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

காஷ்மீர் ராம்கார்க் செக்டாரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சிங் பாகிஸ்தான் ராணுவத்தால் கொடூர கொலை செய்யப்ப்டடார். இந்நிலையில் நரேந்திர சிங் வீட்டுக்கு டில்ல முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்றார்.

ஹரியானா சோனிபேட் பகுதியில் உள்ள நரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கெஜ்ரிவால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார். சர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாடும் பிரதமர் மோடி, நரேந்திர சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூற வேண்டும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்