மோடிக்கு ஜால்ரா போடாத சேனல்களுக்கு தடையா? கெஜ்ரிவால் ட்வீட்

--

பதான்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றின்மூலம் இந்தியாவின் முக்கிய ராணுவ தகவ்ல்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டி என்டிடிவி ஒளிபரப்புக்கு மத்திய அரசு விதித்துள்ள ஒருநாள் தடை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

kejriwal

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ” தொலைக்காட்சி நிறுவனங்களே கவனியுங்கள், மோடிஜிக்கு தொடர்ந்து ஜால்ரா போடாவிட்டால் உங்களுக்கும் இதே கதிதான்” என்று தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

pb_tweet

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தந்து ட்வீட்டில் ” சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து தம்பட்டம் அடித்த என்டிடிவி-கே இந்த நிலையா? இது ஊடகங்கள் மீதும் பேச்சுரிமை மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி: சர்ச்சைக்குரிய ஒளிபரப்பு: என்டிடிவி-க்கு ஒருநாள் தடை