வீட்டுவரி கிடையாது – டில்லி முதலமைச்சர் கெஜ்ரவல் அறிவிப்பு

--

டில்லி,

டில்லியில் வீட்டுவரி கட்டத்தேவையில்லை என்று அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரவல்

தெரிவித்துள்ளார். நிலுவையில் இருக்கும் வீட்டுவரி குறைக்கப்படும் என்றும் அவர்  கூறினார்.

டில்லி முனிசிபல் கவுன்சில், டில்லி கிழக்கு, டில்லி தெற்கு என மூன்று மாநகராட்சித் தேர்தல் வரும்ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறுகிறது. 26 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில் டில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வீட்டுவரி ஊழலின் ஊற்றுக் கண்ணாக உள்ளது.

ஆம் ஆத்மி மாநகராட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றால் அந்த வரி  ஒழிக்கப்படும்   என்றார்.

கட்சியின் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக குறிப்பிட்ட கெஜ்ரவல்,   அது விரைவில் வெளியிடப்படும் என்றும்  கூறினார்.