டெல்லி :

லைநகர் டெல்லியில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று கவர்னரை சந்திக்கிறதுது. முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில்,  அரவிந்த் கெஜ்ரிவாலை சட்டசபை  தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்கின்றனர்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளது ஆம்ஆத்மி கட்சி. இதன் காரணமாக 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் கெஜ்ரிவால்.

முன்னதாக அக்கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ.,க்களின் கூட்டம் டில்லியில் கெஜ்ரிவால் இல்லத்தில் நடக்க உள்ளது. இதில்,  சட்டசபை தலைவராக கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து, டெல்லி  துணைநிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.  அதைத் தொடர்ந்து, கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா பிப்., 14  முதல்  16 க்குள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பிறகு, பதவியேற்பு விழா நடக்கும் தேதி மற்றும் இடம் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.