Random image

டில்லி போலீசாரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கெஜ்ரிவால் விடுவிப்பு

டில்லி:

டில்லி போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

டில்லி லஜ்பத் நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அஜய்குமார் தனேஜா என்ற போலீஸ்காரர் தனது வக்கீல் எல்.என். ராவ் மூலம் 2016-ம் ஆண்டில் டில்லி பெருகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

‘முதல்-வர் கெஜ்ரிவால் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் குறித்து பேட்டியளித்தபோது போலீசாரை கேலிª சய்யும் விதமாக ‘துல்லா’ (மந்தமான தொப்பைக்காரர்கள்) என்ற வார்த்தையை கூறினார். முதல்-வர் பதவியில் உள்ள கெஜ்ரிவால் இது போன்று கூறியது கவலைக்குரியது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்று கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு 2 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.