’கென்னடி கிளப்’ ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 22-ம் தேதி மாற்றம்….!

--

’கென்னடி கிளப்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீட்டிலிருந்து, ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளது படக்குழு.

‘கென்னடி கிளப்’ படத்தில் பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி மற்றும் நிஜ கபடி வீராங்கனைகள் நடித்துள்ளனர். நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடுவதாக இருந்தது. ‘நேர்கொண்ட பார்வை’ இரண்டாம் வாரத்திலும் சில திரையரங்குகள் திரையிடுவார்கள். மேலும், அன்றைய தினம் ‘கோமாளி’ திரைப்படமும் வெளியாகவுள்ளது ஆகையால் தேதி மாற்றப்பட்டுள்ளது.