நைரோபி: கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

கென்ய நாட்டில் சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. உகாண்டா எல்லையில் விடிய, விடிய கொட்டிய மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

அதன் காரணமாக அங்குள்ள பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உள்ளதாக அந்நாடு அறிவித்து இருக்கிறது. கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர்.

இது போன்ற்தொரு பேரழிவை சந்தித்தது இல்லை மேற்கு போகோட் ஆளுநர் லோயன்குபா அறிவித்து இருக்கிறார். ஒரே இரவில் மட்டும் 12 மணி நேரம் இடைவிடாத மழை கொட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக மீட்புப்பணிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில கிராமங்களின் உள்ளே செல்வதற்கு 4 மணி நேரம் பிடிப்பதாக மீட்புக்குழுவினர் கூறி இருக்கின்றனர். இதையடுத்து, ராணுவம் களம் இறக்கப்பட்டு இருக்கிறது.