போதை தரக்கூடிய காட் இலையை எடுத்துச் செல்லும் விமானங்களைத் தடை செய்த முடிவை,  சோமாலிய அரசு திரும்ப பெறுவதற்கான  முயற்சிகளை  தான் மேற்கொண்டு வருவதாக கென்யா அரசு தெரிவித்திருக்கிறது.
காட் எனும் போதை இலையை, வாயில் போட்டு மென்று, மயக்க நிலையை அனுபவிக்கும் பழக்கம் சோமாலியாவில் பரவலாக உண்டு. ஆனால் இந்த போதை இலை சோமாலியாவில் பயிரிடப்டுவதில்லை. கென்யா நாட்டிலேயே அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இந்த நிலையில், காட் போதை இலையை எடுத்துச் செல்லும் விமானங்களை தடை செய்வதாக சோமாலிய அரசு அறிவித்தது.
2-a
இதனால் இந்த போதையிலை வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் அரை மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கென்யா தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் அரசை மீறிய பல அரசாங்கங்கள் உண்டு. அவற்றன் கட்டுப்பாட்டில் நாட்டின் பல பகுதிகள் உள்ளன. அதுபோல செல்வாக்குள்ள சோமாலிலாண்ட் குடியரசு என்ற அமைப்பின் மூத்த அதிகாரியுடன் கென்ய அரசு கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியது.
2-b
உலக அளவில் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் ஒருபுறம் முன்னெடுக்கப்படும் நிலையில், இன்னொரு புறம் போதை  இலை வர்த்தகத்தால் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நிலையை கென்யா எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.