கேரளாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது கம்யூனிஸ்ட் முன்னணி

--

download (1)

திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 86 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப்போலவே கேரள மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. 77.35 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து கேரளாவில், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியை பின்னுக்கு தள்ளி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் முன்னணியில் இருக்கிறது.

இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 86 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 52 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

இதன் மூலம் அங்கு இடதுசாரி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகி இருக்கிறது.