கன்னியாஸ்திரிகள் போராட்டம் எதிரொலி: பிஷப் பிராங்கோ காவல்துறை விசாரணைக்கு ஆஜர்
கொச்சி:
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பேராயர் பிராங்கோ கொச்சி காவல்துறையில் விசாரணைக்கு ஆஜரானார்.
கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜலந்தர் ஆயர் பிராங்கோ மீது மாநில காவல்துறை விசாரணையை முன்னெடுக்காத நிலையில், மாநிலம் முழுவதும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, வரும் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது இந்த நிலையில், கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிராங்கோ மூலக்கல் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என தாக்கல் செய்த முன்ஜாமின் மனு விசா ரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆயர் பிராங்கோ ஆஜராகியுள்ளார்.
வைக்கம் பகுதி துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் 5பேர் கொண்ட குழு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையை தொடர்ந்து பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.