Random image

கன்னியாஸ்திரிகள் போராட்டம் எதிரொலி: பிஷப் பிராங்காவோவுக்கு கேரள போலீஸ் சம்மன்

திருவனந்தபுரம்:

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரிகள் போராட்டம் காரணமாக, கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த பிஷப் பிராங்காவோவுக்கு கேரள போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியே சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்கு பதியப்பட்டுள்ள  நிலையில், நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரள கிறிஸ்தவ அமைப்புகளோ, பெண்கள் அமைப்புகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து கேரள மாநிலம் முழுவதும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். மேலும் கத்தோலிக்க  தலைமையகமான வாடிகனுக்கும் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில், கேரள மந்திரி ஈ.பி.ஜெயராஜன், உரிய சாட்சியங்களுடன் குற்றம்சாட்டப்பட்டவரின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து மாநிலகாவல்துறை, கன்னியாஸ்திரி புகார் காரணமாக  விசாரிக்க வேண்டியுள்ளதால் வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவலை எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி.  விஜய் ஷக்காரே உறுதிப்படுத்தி உள்ளார்.