கேரளாவில் கிளைடர் விமானம் விழுந்து விபத்து: 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு

கொச்சி: கேரளாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை பயிற்சி தளத்தில் இருந்து 2 கடற்படை அதிகாரிகள் சிறிய ரக கிளைடர் விமானத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோப்பும்படி பாலத்தின் நடைபாதையில் திடீரென விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் அதிகாரிகள் ராஜீவ் ஜா, சுனில் குமார் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். ஆனால், இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடங்கி உள்ளது. விபத்தில் பலியான அதிகாரி சஞ்சீவ் ஜா டேராடூனையும், சுனில் குமார் பீகார் மாநிலம், போஜ் நகரையும் சேர்ந்தவர்கள் ஆவர்.