கேரளா: நிலச் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு

 

கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 போ் பலியாகிவிட்டார்கள்.

கடந்த மாத இறுதி முதல் கேரளா மாநிலத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கோழிக்கோடு, கண்ணூா், வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் இருந்த வீடுகள், விளைநிலங்கள்  கடுமையாக சேதமடைந்துள்ளன. நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 போ் பலியாகி இருப்பதாகவும்,  மேலும் 9 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து தேசிய பாதுகாப்பு குழுவிற்கு மாவட்ட நிர்வாகம்  அழைப்பு விடுத்துள்ளது.

இதையடுத்து 50 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்பு படையினா் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். தகவல் அறிந்த அம்மாநில முதல்வா் பினராயி மீட்பு பணிகளை விரைவு படுத்துமாறு தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா்கள், அமைச்சா்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிலச்சரிவு காரணமாக கோழிக்கோடு-கொள்ளேகால் நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டதால், போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கனமழை, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.