கன்னியாஸ்திரி விவகாரம்….நிருபரை திட்டிய மோகன்லால் மன்னிப்பு கோரினார்

திருவனந்தபுரம்:

கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் குறித்து கேள்வி கேட்ட நிருபரிடம் கோபப்பட்ட நடிகர் மோகன்லால் மன்னிப்பு கோரினார்.

கேரள வெள்ள நிவாரணம் விஸ்வசாந்தி அறக்கட்டளை அலுவலகத்தில் நடிகர் மோகன்லால் பேட்டியளித்தார். அப்போது, கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய நிருபரிடம் மோகன்லால் எரிச்சடைந்து கடிந்து கொண்டார்.

‘‘வெள்ள நிவாரண குறித்து பேசி கொண்டிருக்கும்போது அவசியமற்ற கேள்விகளை கேட்க வெட்கமாக இல்லையா?. வெள்ள நிவாரணத்துக்கும் கன்னியாஸ்திரி புகாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?’’ என்று மோகன்லால் எதிர் கேள்வி கேட்டார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மோகன்லாலுக்கு கண்டனங்களும், விமர்சனங்களை எழுந்தன. இந்நிலையில் இது குறித்து மோகன்லால் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘சமயம் அறியாமல் அந்த பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி தன்னை கோபப்படுத்தியது. அந்த கேள்வி கேரளாவில் மிகுந்த பரபரப்புக்குள்ளான ஒரு விவகாரம் தான். ஆனால், அப்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை. நான் வேறொரு மனநிலையில் இருந்ததால் நிருபருக்கு அப்படி பதில் அளிக்க நேர்ந்தது.

ஒரு நிறுவனத்தையோ, பத்திரிகையாளர்களையோ, தனிநபரையோ அவமதிக்கும் வகையில் நான் அப்படி பதில் அளிக்கவில்லை. எனது பதிலால் அந்த கேள்வியை எழுப்பியவரின் மனம் காயப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kerala actor mohanlal ask apology for scolding reporter for riseing ouestion fo nun issue, கன்னியாஸ்திரி விவகாரம்....நிருபரை திட்டிய மோகன்லால் மன்னிப்பு கோரினார்
-=-