Random image

மலையாள நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க நடிகைகள் மீண்டும் வற்புறுத்தல்

திருவனந்தபுரம்

புகழ்பெற்ற நடிகையை கடத்தி பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் நடிகர் திலிப் மீது நடவடிக்கை எடுக்க மீண்டும் நடிகைகள் வற்புறுத்தி உள்ளனர்.

பிரபல மலையாள மற்றும் தமிழ் திரையுலக நடிகை ஒருவர் காரில் கலத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   அதன் பிறகு சுமார் 90 நாட்களுக்கு பிறகு ஜாமினில் திலிப் வெளிவந்தார்.  சிறையில் அடைக்கப்பட்டதால் மலையாள  நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் சினிமா கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த ரேவதி, பார்வதி, பத்மப்ரியா உள்ளிட்ட நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.   அதை ஒட்டி கட்னத ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடந்தது.   அப்போது திலீப் மீது நடவடிக்கை எடுக்க சங்கம் ஒப்புக் கொண்டது.

ஆனால் அதன் பிறகு இந்த விவகாரம் அப்படியே அமுங்கி விட்டது.   அதனால் பெண் சினிமா கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நடிகைகள் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.   அந்த கடிதத்தில் முன்பு உறுதி அளித்தபடி நடிகர் திலீப் மீது ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.