கேரளா ஏடிஜிபி வீட்டு நாய் மீது தாக்குதல்….போலீசில் புகார்

திருவனந்தபுரம்:

கேரளா ஏடிஜிபி சுதேஷ் குமாரின் செல்லப் பிராணியான நாயை வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த நாயை கடந்த 20ம் தேதி மர்ம நபர்கள் தாக்கியதாக பேரூர்கடா போலீசில் சுதேஷ் குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்கு நாய் வளர்த்து வருகிறேன். அதை யாரோ தாக்கியுள்ளனர் என்று சுதேஷ் குமார் தெரிவித்துள்ளார். இவரது மகள் போலீஸ் டிரைவரை தாக்கியதாக எழுந்த புகாரில் ஏடிஜிபி இடமாற்றம் செய்யப்பட்டவர். இந்த வழக்கும் போலீசாரின் விசாரணையில் உள்ளது.

போலீஸ் டிரைவரான கவாஸ்கர் ஏடிஜிபி.யின் மகள் தன்னை தொடர்ந்து தாக்கி துன்புறுத்தியதாக டிஜிபி.யிடம் புகார் அளித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. கவனமின்றி வாகனத்தை கவாஸ்கர் ஓட்டினார் என்று ஏடிஜிபி மகள் தெரிவித்தார்.