திருவனந்தபுரம்

ரும் ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைக்கப்பட உள்ளது.

நீண்ட நாட்களாக கேரளாவில் அரசு நிர்வாகத்துறை அமைப்பது குறித்து ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்தது.   இது குறித்து பல முறை சட்டசபையில் விவாதிக்கப்பட்டும் ஒரு முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது.   கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி வரும் ஜனவரி 1 முதல் கேரளா அரசு நிர்வாகத்துறை அமைக்கப்பட உள்ளது.  இது குறித்து அரசின் தலைமைச் செயலாளர் விஜயானந்த், “வரும் ஜனவரி முதல் அமைக்கப்பட உள்ள கேரளா அரசு நிர்வாகத்துறை அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் வகுப்பதில் முழுமையாக ஈடுபடும்.  இளைஞர்கள் நிர்வாகத்துறையில் பங்கேற்க வகை செய்யும் இந்தத் துறையால் அரசின் அதிகார மையத்துக்கு ஒரு புது ரத்தம் பாய்ச்சப்படும்.    தற்போது அதிகம் படித்தவர்களில் பலர் எழுத்தராகவே பணி புரிகின்றனர்.  அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஒவ்வொரு துறையும் பணிபுரியும் முறை இதனால் மாற்றப்பட்டு மேலும் முன்னேற்றம் அடைய உதவும்.    ஊழியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் திறமையானவர்கள் முன்னேற முடியும்.   இந்தத் துறையில் பணி புரிய மூன்று முறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.   முதலாவது நேரடியாக பணி அமர்த்துவது.   இதன் படி கல்வி தகுதியுள்ள 21 வயது முதல் 32 வயதுள்ள இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.    இரண்டாம் முறை அரசில் பணி புரியும் 40 வயதுக்குட்பட்ட பணியாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.    மூன்றாவது முறை அரசாணை பெற்ற (Gazetted offucers) ஐம்பது வயதுக்குட்பட்ட அதிகாரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” எனக் கூறி உள்ளார்.