சென்னை:

கேரளாவில் குழந்தை இறப்புவிகிதம் மிகமிக குறைந்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார சர்வே பாராட்டுத் தெரிவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் ஆயிரத்துக்கு 12 குழந்தைகள் மரணம் என்று இருந்தது. அந்த எண்ணிக்கையை
குறைக்க அம்மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வந்தன. இதன்பலனாக 2009 ம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை
குறையத் தொடங்கியது. தற்போது ஆயிரத்துக்கு 6 என்ற கணக்கில் குழந்தை இறப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இது ஒப்பீட்டளவில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளைப்போல் குழந்தை இறப்பு குறைந்திருப்பதாக பாராட்டுத் தெரிவிக்கப்பட்
டு ள்ளது. கேரளாவில் இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன. தமிழகத்தில்
இந்த எண்ணிக்கை 21 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.