30ம் தேதி கேரளா சட்டமன்ற சிறப்பு கூட்டம்

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் பெய்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதை அதிதீவிர பேரழிவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளாவில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்க மாநில சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை வரும் 30ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. மறுகட்டமைப்பு பணிகளை செய்ய ஏதுவாக ஜி.எஸ்.டி.யில் மாநில அரசு கூடுதலாக 10 சதவீதம் வரி வசூல் செய்யவும் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.