திருவனந்தபுரம்: 

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்க்க்கும் மத்தியஅரசின் முடிவுக்கு எதிராக,  கேரள சட்டமன்றத்தில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரள சட்டமன்றத்தில், நேற்று பினராயி விஜயன் அரசுமீது காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து காரணமாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, விமான நிலையங்களை தனியாருக்கு கொடுக்கும் மத்தியஅரசுக்கு எதிராக தீர்மானம்  நிறை வேற்றப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,  திருவனந்தபுரம் உள்பட நாட்டின் பல முக்கிய விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு தர கூடாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மத்தியஅரசின் முடிவுக்கு எதிர்ப்பு கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில்,  நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தல்,  கேரள முதல்வர் பினராயி விஜயன், விமான நிலையங்களை குத்தகைக்குவிடும் அரசின் முடிவுற்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது, தீர்மானத்தின் போது, மாநில அரசுகளின் பங்குகள் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள் மீது முடிவுகள் எடுத்துள்ளது. ஆனால் இம்முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் , இந்த திட்டம், மக்களின் நலனுக்கு எதிரானது என்பதால் விமான நிலைய தனியார்மயமாக்கலில் அரசு மையத்துடன் ஒத்துழைக்க முடியாது என்றும் முதல்வர் தெளிவுபடுத்தினார். அதைத்தொடர்ந்து  எதிர்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே இதுதொடர்பாக கடந்த 20ம் தேதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம் என்று முடிவு  எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேரள சட்டமன்றத்தில்,  பாஜக சார்பில் ஓ. ராஜகோபால் மட்டுமே கேரள சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் நிலையில்,  தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதால் பாஜக உறுப்பினர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.