கேரளா: ஏ.டி.எம்.களுக்கு பிரதமர் தலைமையில் இறுதி அஞ்சலியாம்!

0

ருப்பு பணத்தை ஒழிப்பதற்காக  500..1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

ஆனால் வங்கிகளில் போதுமான பணம் இன்மை, அதீத கூட்டம், ஏ.டி.எம்.கள் செயல்படாமை போன்றவற்றால் மக்கள் சிரமப்படுகிறார்கள்.

நாட்டின் பல இடங்களில் மக்கள் தங்கள் ஆற்றாமையை, கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் ஆத்திரமான மக்கள் அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

“எங்களை விட்டுச்சென்ற ஏடிஎம் இயந்திரத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி நாடு திரும்பியவுடன் இறுதி அஞ்சலி,  நடக்கும்” என்று எழுதியும் இருக்கிறார்கள்.

 

கார்ட்டூன் கேலரி