கேரளா : 14 நாட்கள் சிறை தண்டனை பெற்ற பாஜக வேட்பாளர்

--

ட்டினம்திட்டா, கேரளா

பரிமலை தரிசனத்துக்கு சென்ற பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக வேட்பாளருக்கு 14 நாட்கள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.   அதை ஒட்டி கேரள மாநிலத்தில் கடும் போராட்டம் நடைபெற்றது.  பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் அப்போது சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுத்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட பாஜக தொண்டர் பிரகாஷ் பாபு மீது ஒரு வழக்கு நிலுவையில் இருந்தது.   போராட்டத்தின் போது கடந்த நவம்பர் மாதம் சபரிமலைக்கு சென்ற பெண் ஒருவரை தாகியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  அவர் தற்போது கோழிக்கோடு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த ராணி நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

பிரகாஷ் பாபு ஜாமீனுக்கு உடனடியாக மனு அளித்தார்.   ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.   தற்போது அவர் கொட்டாரக்கரா சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.   விரைவில் ஜாமீன் கோரி அவர் மேல் முறையீடு செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரகாஷ் பாபு ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி உள்ளதால் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.   வரும்  ஏப்ரல் மாதம் 23 அன்று கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.