திருவனந்தபுரம்;

கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் திருவிழாவில் 30 லட்சம் பெண்கள் கலந்தகொண்டனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா கடந்த மாதம 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய திருவிழாவான பொங்கல் வழிபாடு இன்று நடந்தது.

கோவில் தலைமை அர்ச்சகர் வாமணன் நம்பூதிரி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஆயிரகணக்கான பெண்கள சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர். பாரம்பரிய அறுவடை திருவிழாவாக பொங்கல் கருதப்படும். ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவுக்கு அதிக அளவிலான பெண்களை ஈர்த்துள்ளது.

இந்த விழாவில் சுமார் 30 லட்சம் பெண்கள் கலந்துகொண்டனர் என்று தேவஸ்தான துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விழாவுக்காக பக்தர்கள் 9 நாள் விரதம் மேற்கொள்வார்கள். விழாவை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆளில்லா பறக்கும் விமானங்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உலகிலேயே பெண்கள் அதிகளவில் கூடும் திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்த விழா கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.