தமிழக முதல்வருடன் கேரள முதல்வர் திடீர் சந்திப்பு!

சென்னை,

 தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் திடீரென சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கம்யூனிஸ்டு கட்சிகள் முதல்வருக்கு எதிராக களமிறங்கி உள்ள நிலைய கேரள கம்யூனிஸ்டு முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை கூட்டி உள்ளது.

சென்னையில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் இன்று நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ள கேரள முதல்வர் தலைமை செயலகம் வந்து முதல்வரை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாகவும், முல்லை பெரியாறு அணை உள்பட இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என்றார்.

கடந்த மாதம் நடிகர் கமல் கேரளா சென்றிருந்தபோது, கேரள முதல்வர் பிரனாயி விஜயனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.