‘‘பேய், பிசாசு என்றால் எனக்கு பயம்’’!! இரும்பு மனிதர் பினராய் விஜயன் ஒப்புதல்

கண்ணூர்:

கேரள முதல்வர் பினராய் விஜயன் இரும்பு மனிதர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தீவிர கம்யூனிஸவாதியான அவர் தைரியமாகவும், வீரமாகவும் செயல்படக் கூடியவர் என பலராலும் கூறப்படுபவர்.

ஆனால், அவருக்கு பேய், பிசாசு என்றால் பயம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 24ம் தேதி அவர் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த தருணத்தில் அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே அறிந்து கொள்வோம்…

# பினராய் குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தில் பிறந்தவர். உயர்நிலை கல்வியை முடித்தவுடன் கைத்தறி கூடத்தில் வேலைபார்த்தார். தலசேரியில் உள்ள ப்ரெனன் கல்லூரியில் இணைவதற்கு முன்பு அவர் கர்ந £டகா மாநிலம் மைசூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்துள்ளார்.

# பள்ளிக்கு அவர் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து சென்றார். அவரிடம் ஒரே ஒரு சட்டை மட்டுமே இருந்தது. ‘‘இதர கலர் சட்டைகளை அணிய மாட்டேன் என்பது கிடையாது. என்னிடம் வேறு சட்டைகள் இல்லை’’ என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

# அவர் ஒரு எளிமையான மனிதர். எப்போதும் வெள்ளை சட்டையும்,வேஷ்டி மட்டுமே அணிவார். அவரது பிறந்தநாள் அன்று அவரது மகள் இதை தான் பரிசளிப்பார்.

# சிபிஎம் கட்சியின் வலுவான மனிதராக இவர் கருதப்படுகிறார். ‘‘நான் தைரியமானவன் கிடையாது. சிறு வயதில் பேய், பிசாசு என்றால் எனக்கு பயம். அதனால் நான் எங்கேயும் தனியாக தங்க மாட்டேன். எப்போதும் எனது தாய் இருக்கும் சமையலறையில் தான் படிப்பேன்’’ என்று ஒரு நேர்கானலில் தெரிவித்திருந்தார்.

# இவர் கேரளா மாநிலம் கண்ணூரில் பிறந்தவர். இங்கு தான் 1940ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி நள்ளிரவில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது.

# இவர் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed