கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது

கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் பதவியில் உள்ளார். தற்போது சுமார் 67 வயதாகும் இவர் கடந்த 2016 ஆம் வருடம் மே மாதம் முதல் கேரள மாநில முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.

கடந்த 6 ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காக பினராயி விஜயன் மாநிலம் எங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார்.  அவருக்கு இதனால் உடல்நலக் குறைவு உண்டானது.

இதையொட்டி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.    அவருக்கு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது