தமிழகத்தில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள  முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும். வெங்காயம், தக்காளி மற்றும் உருளை ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்தும், வியாபாரிகளிடம் இருந்தும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.