கேரள வெள்ள மீட்புப் பணிகள் : முதல்வர் ஆய்வு

கொச்சி

கேரளாவில் நடைபெறும் வெள்ள மீட்புப் பணிகளை முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார்.

கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் வீடிழந்து பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.    நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.   தற்போது மழை வெகுவாக குறைந்துள்ளதால் அங்கு மீட்புப் பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன.

கேரள முதல்வர் பினராயி விஜயன்மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் இன்று நேரில் ஆய்வு செய்தார்.    தற்போது மழை குறைந்துள்ளதால் பாதுகப்பு முகாம்களில் உள்ளவர்கள் தங்கள் இடத்துக்கு திரும்பி உள்ளனர்.   ஆயினும் இன்னும் 3,42,699 மக்கள் முகாம்களில் தங்கி உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25.6 லட்சம் மின் இணைப்புக்களில் 25.04 லட்சம் இணைப்புக்கள் சரி செய்யப்பட்டுள்ளன    குடிநீர் இன்றி அவதிப்படும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.   நீர் நிரப்பும் மையங்கள் குட்டநாடு மற்றும் செங்கண்ணூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் இறந்த விலங்குகளின் சடலங்களை புதைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.  இதுவரை வெள்ளத்தால் மரணம் அடைந்த 4 லட்சம் பறவைகள், மற்றும் 18,532 சிறிய விலங்குகளும், 5766 பெரிய விலங்குகளும் புதைக்கப்பட்டுள்ளன.