லண்டன்:

கேரளாவின் அடிப்படை முதலீட்டு நிதி வாரியத்தின் பங்குகளை லண்டன் பங்குச் சந்தையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விற்பனைக்கு வெளியிட்டார்.


இந்த பங்கு பத்திரங்களின் விற்பனை மூலம் ரூ.2,150 கோடி திரட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
ஆண்டுக்கு 9.723% என்ற விகிதத்தில் பல வகைப்பட்ட பங்கு பத்திரங்களுக்கு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தொகை கேரள பட்ஜெட்டில் எதிரொலிக்காது. கேரளாவின் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால், கடன் அதிகம் வைத்துள்ள மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற வாய்ப்பு உள்ளது.
பல வகைப்பட்ட பங்கு பத்திர விற்பனை திட்டம் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கின் மூளையில் உதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திரட்டப்படும் இந்த தொகை மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் அடிப்படை கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.