தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட கேரள முதல்வர்

திருவனந்தபுரம்

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் சமீபத்தில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்  18 பேர் உயிர் இழந்தனர்.

இந்த விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக பார்வையிட்டு ஆறுதல் அளித்தார்.

அப்போது அவர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடன் உரையாடி விவரங்களைக் கேட்டறிந்தார்.

இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை சூப்பிரண்ட் உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது,

இதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.