கேரள காங்.தலைவர் வி.எம்.சுசீதரன் திடீர் விலகல் !

திருவனந்தபுரம்,

தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறியுள்ள அவர், தனது உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வி.எம்.சுசீதரன் சில நாட்களுக்குமுன் சாலைவிபத்தில் சிக்கினார். அதிலிருந்து இவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்துவந்தார்.

ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர் , மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்தமுடிவு எடுத்ததாகவும், நீண்டநாள் சிகிச்சை பெறவேண்டியிருப்பதால் தன்னால் கட்சியின் தலைவர் பதவியில் அமர்ந்து பணியாற்ற முடியாது என்றார்.

சுசீதரனின் பதவி விலகல் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சுதாகரன், சுசீதரன் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு எதிர்பாராதது என்றும் அவருக்கு உடல் பிரச்னை உள்ளது. ஆனால் உண்மையான பிரச்னை என்னவென்று தெரியவில்லை. கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.