கம்யூனிஸ்ட் அரசுக்குக் காங்கிரஸ் கிடுக்கிப்பிடி..


நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் கொரோனா உயிர் இழப்பு, ஒவ்வொருவருக்கும் மூச்சுத் திணறலை  ஏற்படுத்தியுள்ள நிலையில்-

கேரள எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ் சென்னிதலா , நேற்று அணுகுண்டு ஒன்றை வீசியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் அவர் அளித்த பேட்டியே அந்த குண்டு. அதன் சாராம்சம்:

‘’ கேரள மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் குறித்த ‘டேடா’ வை சேகரிக்கும் பொறுப்பு ஒரு அமெரிக்கத் தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது,கொரோனா பாதித்தவர்கள் உரிமையைப் பறிக்கும் செயல். அரசு எந்திரங்கள் மூலம் சேகரிக்கப்படும் தகவல், அந்த கம்பெனியின் ‘செர்வருக்கு’ அனுப்பப்படுகிறது.

அந்த கம்பெனி எதிர்காலத்தில் வணிக நோக்கங்களுக்கு இந்த ’டேடா’க்களை’ விற்பனை செய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

அந்த கம்பெனியின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளூர் அரசு நிறுவனங்களை இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

அந்த கம்பெனியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த ஷரத்துக்கள் மற்றும் விதிக்கப்பட்ட நிபந்தனைகளைக் கேரள அரசு உடனடியாக  பகிரங்கமாக வெளியிட வேண்டும்.’ என்று அதிரடி கிளப்பியுள்ளார், ரமேஷ் சென்னிதலா.

முதல்வரின் பதிலுக்கு, நாடே காத்திருக்கிறது.

– ஏழுமலை வெங்கடேசன்