குடிபோதையில் மனைவியின் மகனை அடித்து துன்புறுத்திய இரக்கமற்ற தந்தை..! இது கேரளா கொடூரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 வயது வளர்ப்பு மகனை தாக்கி சித்ரவதை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆலப்புழா மாவட்டத்தின் அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் வைஷாக். சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகி கணவரை இழந்த பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார். பெண்ணுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் வைஷாக் அந்த பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டாலும்  சிறுவனை மகனாக ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 3 வயது சிறுவனை கண்மூடித் தனமாக அடித்து உதைத்து உள்ளார்.

இந் நிலையில் வழக்கம் போல குடிபோதையில் இருந்த வைஷாக், சிறுவனை அடித்து உதைத்து தள்ளி உள்ளார். அதில் சிறுவனின் மர்ம உறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறிய சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வைஷாக்கை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

சிறுவன் ஆலப்புழா மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வைஷாக், அவரது மனைவி ஆகியோரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையையும் போலீசார் விசாரணைக்கான அழைத்துள்ளனர்.